பலஸ்தீனுக்கு ஆதரவாக கொழும்பில் சமாதான மாநாடு : பிரகடனம் ஒன்றும் முன்மொழியப்பட்டது.


நூருல் ஹுதா உமர்-

லஸ்தீனுக்கு பூரண சமாதானத்துடன் நிம்மதியும், சுதந்திர வாழ்வும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் வீ ஆர் வன் அமைப்பு ஏற்பாடு செய்த சமாதான எழுச்சி நிகழ்வு நேற்று நடைபெற்றது.

சர்வமத தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், முக்கிய பல சிவில் சமூக இயக்கங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் இலங்கைக்கான பலஸ்தீன அரசின் தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம். எச். டார் செயிட் கலந்து கொண்டார்.

இந்த சமாதான மாநாட்டில் பிரகடனம் ஒன்று வாசிக்கப்பட்டு அந்த மாநாட்டில் கலந்துகொண்ட சர்வமத தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக இயக்கங்கள் ஆகியவற்றின் ஒப்புதலுடன் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயத்தில் குறித்த பிரகடனம் கையளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர்ரஹ்மான் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :