மூன்று கல்வி வலயங்களுக்கிடையிலான வலய மட்ட சமூக ஒருமைப்பாட்டு நிகழ்வு.


அஸ்ஹர் இப்றாஹிம்-

க்கரைப்பற்று வலயக் கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எம். ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் ஆலோசனைக்கமைவாக அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் வலயமட்ட சமூக ஒருமைப்பாட்டு ( நல்லிணக்க) முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிமனையின் சமூக விஞ்ஞானப்பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.ஏ.றபீக் அவர்கள் தலைமையில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எம்.றஹ்மதுல்லாஹ் கலந்து சிறப்பித்ததுடன். கௌரவ அதிதியாக அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை பிரதி அதிபர் ஏ.கே.நியாஸ் அவர்கள் கலந்து கொண்டார்.

இதில் அக்கரைப்பற்று, திருக்கோவில், அம்பாறை வலயங்களைச்சேர்ந்த மாணவர்களும் ஆசிரிய ,ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாணவர்களது பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் அரங்கேறியதுடன்.பாரம்பரிய ,சமய விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் பல தேசிய ரீதியில் இடம் பிடித்த நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.

இந் நல்லிணக்க நிகழ்வில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை,அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, ஸ்ரீ இராமகிருஸ்னா கல்லூரி, ஸ்ரீ இராமகிருஸ்னா மகா வித்தியாலயம், அல்- ஸிறாஜ் மகா வித்தியாலயம், ஸ்ரீ தம்மரத்ன சிங்கள வித்தியாலயம், மதீனா வித்தியாலயம்,அக்கரைப்பற்று கனிஷ்ட வித்தியாலயம், அல்- கமர் வித்தியாலயம், முனவ்வரா கனிஷ்ட கல்லூரி, அஸ்- ஸிறாஜ் கனிஷ்ட கல்லூரி ஆகிய பாடசாலைகள் கலந்து கொண்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :