அஸ்ஹர் இப்றாஹிம்-
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் படி கல்முனை வலயத்தில் கல்முனை முஸ்லிம் கோட்டத்தில் கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 25 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்து கல்முனை முஸ்லிம் கோட்டத்தில் முதல் நிலையினை பெற்றுள்ளனர்.
குறித்த பாடசாலையில் 163 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 25 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றதோடு 90 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
மேலும் பெளதீக வள பற்றாக் குறை அதிகமாக காணப்படும் இப்பாடசாலையில் கடந்த 10 வருடங்களுக்கு மேல் ஒவ்வொரு முறையும் 20ற்கு மேற்பட்ட மாணவர்கள் சித்தியடைந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கல்முனை முஸ்லிம் கல்விக் கோட்டத்தில் முன்னணி இடை நிலைப் பாடசாலையாக திகழும் இப்பாடசாலையின் அதிபர் ஏ.எச் அலி அக்பரின் வழிகாட்டலினாலும், பெற்றோர்,ஆசிரியர் மாணவர்களின் அயராத முயற்சியினாலும் பெறப்பட்டுள்ள இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்த அனைவருக்கும் பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
கல்முனை முஸ்லிம் கல்விக் கோட்டத்தில் கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 25 மாணவர்களும், மருதமுனை அல் மனார் வித்தியாலயத்தில் 24 மாணவர்களும், மருதமுனை ஹிக்மா வித்தியாலயத்தில் 16 மாணவர்களும், மருதமுனை அல் ஹம்ரா வித்தியாலயத்தில் 11 மாணவர்களும், மருதமுனை மதீனா வித்தியாலயம் மற்றும் கல்முனை அஸ் ஸுஹரா வித்தியாலயம் என்பவற்றில் தலா 9 மாணவர்களும், மருதமுனை அல் மினன் வித்தியாலயம் மற்றும் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் என்பவற்றில் தலா 4 மாணவர்களும், மருதமுனை புலவர்மணி சரிபுதீன் வித்தியாலயம் மற்றும் கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலை என்பவற்றில் தலா 3 மாணவர்களும், நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலயம் மற்றும் நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயம் ஆகியவற்றில் தலா 2 மாணவர்களும், மருதமுனை அக்பர் வித்தியாலயம்,கல்முனை ரோயல் வித்தியாலயம் என்பவற்றில் தலா 1 மாணவருமாக மொத்தம் 114 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.
0 comments :
Post a Comment