பொதிகளில் மிளகாய்ச் செய்கை! காரைதீவில் அறிமுகம்.



வி.ரி.சகாதேவராஜா-
பொதிகளில் மிளகாய்ச் செய்கை செய்யும் முறைமையை ஊக்குவிக்கும் வகையில் காரைதீவு விவசாய போதனாசிரியர் பிரிவில்
கூட்டு விளம்பர நிகழ்வு நேற்று இடம் பெற்றது.

காரைதீவு விவசாய போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் தொழில்நுட்ப உதவியாளர் திருமதி எஸ்.நிலக்க்ஷியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலய உதவி விவசாய பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் , கௌரவ அதிதியாக விவசாய போதனாசிரியர் ஜே.எம் . பாஸில் ஆகியோர் கலந்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

விவசாய போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் பேசுகையில்..

பொதிப் பயிர் செய்கையானது நிலம் அற்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். எமது பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளம் கடும் வறட்சி என்பவற்றால் மாறி மாறி வரும் அனர்த்தங்களால் பயிர் செய்கை பாதிக்கப்படுகிறது. இத்தகைய பாதிப்பை குறைக்கும் வகையிலும் நிலமில்லாத பிரச்சினை தீர்க்கும் வகையிலும் இப் பொதிப் பயிர் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
குறிப்பாக நகர மாடி வீடுகளுக்கு ஏற்ற முறையாகவுமுள்ளது.
எனவே விவசாயிகள் இத்தகைய புதிய முறைகளையும் பின்பற்றி வாழ்வை வளமாக்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

விவசாயிகள் பங்கேற்ற இந் நிகழ்வின் இறுதியில் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :