புதிய அதிபர்களுக்கான சேவை முன் பயிற்சி ஆரம்பம்.

 

வி.ரி. சகாதேவராஜா-

லங்கை அதிபர் சேவை தர மூன்றுக்கு தெரிவான புதிய அதிபர்களுக்கான சேவை முன் பயிற்சி நேற்று முன்தினம் 16 ஆம் தேதி நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது.

கல்முனை மற்றும் சம்மாந்துறை வலய புதிய அதிபர்களுக்கான சேவை முன் பயிற்சி அங்குரார்ப்பண வைபவம் நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலை ஹாசிம் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம் எஸ் சஹுதுல் நஜீம் தலைமை நடைபெற்ற இந்த நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

கல்முனை மற்றும் சம்மாந்துறை வலயங்களைச்சேர்ந்த 106 புதிய அதிபர்கள் கலந்து கொண்டனர்.

முதல் நாள் காலை வளவாளராக முன்னாள் கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் எஸ்.மனோகரன் கலந்து கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் 16ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை இப்பயிற்சி நடைபெற இருக்கிறது.

காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை இந்த பயிற்சி தொடர்ச்சியாக வழங்கப்பட இருக்கின்றது .
தினமும் காலை மாலை சிற்றூர் டி மற்றும் மதிய போசனம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :