குறித்த சுற்றுப்போட்டியில் பிரயோக விஞ்ஞான பீட அணியும் களமிறங்கியுள்ளது. இந்த அணியினர் இன்று (2023.11.13) தங்களுக்கான உத்தியோகபூர்வ அங்கியை அறிமுகம் செய்தனர்.
உத்தியோகபூர்வ அங்கி அறிமுக நிகழ்வு அணியின் தலைவர் ஏ. முஹம்மட் றம்ஸான் தலைமையில் பிரயோக விஞ்ஞான பீட நிர்வாக கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.
பீடாதிபதி கலாநிதி எம்.எச்.ஹாறுன் மற்றும் பேராசிரியர் ஏ.எம்.ரஷ்மி உதவிப் பதிவாளர் எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஆகியோருடன் அணியின் தலைவர் ஏ. முஹம்மட் றம்ஸான் ஆகியோர் இணைந்து அங்கியை அறிமுகம் செய்து வைத்தனர்.
நிகழ்வின்போது அணியில் இணைந்து விளையாடும் வீரர்கள் உட்பட விரிவுரையாளர் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இச்சுற்றுப் போட்டியில் 12 கழகங்கள் பங்குபற்றுகின்றன தென்கிழக்கு பல்கலைக்கழக பீடங்களான (FAC,FMC,FAS,FIA,FE,FT) இவற்றுடன் இணைந்து நிர்வாக உத்தியோகஸ்தர், பிரதான நூலக அணி, நிதிப் பிரிவு அணி, பாதுகாப்பு உத்தியோகத்தர் அணிகளும் பங்கு பற்றுகின்றன.
இச்சுற்றுப் தொடரில் அதிக புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் வகிக்கும் 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்குச்செல்ல ஏனைய 8 அணிகள் தொடரிலிருந்து வெளியேறும்.
இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் பிரயோக விஞ்ஞான பீட FALCONS அணியினர் நடந்து முடிந்த 02 போட்டிகளிலும் அபார வெற்றியீட்டி தரவரிசையில் முன்னிலை வகிக்கிறார்கள்.
FALCONS அணியின் தலைவரான முஹம்மட் றம்ஸான் இந்த பிராந்தியத்தின் ஒரு தலைசிறந்த சிரேஷ்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment