பத்து இலட்சம் பேருக்கான விழிப்புணர்வும், பத்து இலட்சம் மரக்கன்றுகள் நடலும்!!



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலய கமு /கமு/ மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மஹா வித்தியாலய அதிபர் வீ. எம்.ஸம்ஸம் அவர்களின் வழிகாட்டலில் கமு /சது/சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் தரம்-07 இல் கல்வி பயின்று வரும் ஜலீல் பாத்திமா மின்ஹா (மின்மினி மின்ஹா) எனும் மாணவியால் "காலநிலை மாற்றம்" எனும் தொனிப்பொருளில் பத்து இலட்சம் பேருக்கான விழிப்புணர்வும், பத்து இலட்சம் மரக்கன்றுகள் நடலும் திட்டத்தின் கீழ் கமு /கமு/ மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மஹா வித்தியாலய காலை ஆராதனையின் போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றி பலரதும் கவனத்தை ஈர்த்தார்.

கமு /கமு/ மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மகா வித்தியாலய பிரதி அதிபர் ஏ.எல். றஜாப்தீன் அவர்களின் நெறிப்படுத்தலில் மிகச்சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் அனைத்து கல்விசார் மற்றும் கல்விசாரா ஆளணியினரும் பங்கேற்று குறித்த மாணவிக்கு மாலை சூடி வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :