எம்.ஏ.ஏ.அக்தார்-
சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் (ஜீ.எம்.எம்.எஸ்) பாடசாலை நிறைவேற்று அபிவிருத்திக் குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ் விடுத்த கோரிக்கையை ஏற்று பாடசாலைக்கு விஜயம் செய்த நாபீர் பெளண்டேசன் தலைவரும் பொறியியலாளருமான உதுமான்கண்டு நாபிர் அவர்கள் பாடசாலையின் பல தேவைகளைக் கேட்டறிந்ததோடு உடனடித் தேவையாக இருந்த ஒரு தொகுதி "பிளாஸ்டிக்" கதிரைகளைப் பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்தார்.
பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் இடம்பெற்ற கதிரைகள் கையளிக்கும் நிகழ்வில் உதவி அதிபர் எம்.ஏ.ஸி.எம்.நஜீம், ஆசிரியர்கள், மாணவர்கள், நிறைவேற்று அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment