திருகோணமலை மாவட்டத்தில் தாழ் நிலப்பிரதேசங்களில் வெள்ள அபாயம்.


எம்.ஏ.ஏ.அக்தார்-

திருகோணமலையில் கடந்த சிலநாட்களாக பெய்துவரும் காற்றுடன்கூடிய மழையின் காரணமாக பல தாழ்நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

 அந்தவகையில் தற்போது  பெய்து வரும்  காற்றுடன் கூடிய மழை காரணமாக வெருகல் ஊப்பூரல் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆறு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்தார். 

மேலதிக சேதங்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் திருகோணமலை நகரை அண்மித்த கன்னியா பீலியடி பகுதி உட்பட பல பகுதிகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளததன் காரணமாக பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வடிகான் அமைக்கப்படாததன் காரணமாக வெள்ள நீர் வீட்டுக்குள் புகுந்துள்ளதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :