முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்! அறைகூவல் விடுக்கிறார் நாபீர்!!



ன்றைய காலகட்டத்தில் இலங்கையில் முஸ்லிம்கள் பல்வேறு நெருக்குதல்களை எதிர்நோக்குகின்றனர். இவ்வாறான சூழலில் முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சிகளும் இயக்கங்களும் பல்வேறு அணிகளானதால் பலமிழந்து முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழலில் முஸ்லிம் கட்சிகளும் இயக்கங்களும் தங்களது கொள்களைகளை புறம்தள்ளிவிட்டு சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவது என்ற உண்மையான கொள்கையை முன்னிறுத்தி உடனடியாக ஒன்றிணைய வேண்டும் என நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் ECM நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் சமூக சிந்தனையாளருமான பொறியலாளர் உதுமாங்கண்டு நாபீர் அறைகூவல் விடுத்துள்ளார்.

மேற்படி விடயங்களை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு 2023.11.12 ஆம் திகதி சம்மாந்துறையில் அமைந்துள்ள ECM நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே பொறியலாளர் உதுமாங்கண்டு நாபீர், கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்றும் வேலைத்திட்டங்களுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட போதிலும் அதன் ஸ்தாபகர் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுக்குப் பின்னர் அந்த அணியில் இருந்தவர்கள் பல்வேறு அணிகளாக பிரிந்து சென்றதன் பின்னர் முஸ்லிம்களின் அரசியல் தேவைகள் முதல் அன்றாட தேவைப்பாடுகள் வரை நிறைவேறுவதில் சிக்கல்கள் இடம்பெற்றுள்ளன என்றும் வீழ்ந்துள்ள முஸ்லிம் மக்களின் தேவைகளை நிறைவேற்ற ஒன்றிணைந்து எங்களது பாராளமன்ற பலத்தை உறுதிப்படுத்துவதன் ஊடாக எங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் எதிர்க்கட்சி அரசியல் சாத்தியப்பாடாது என கூறிய நாபீர், ஆளும்கட்சியில் இணைந்து இருப்பதனூடாகவே முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :