திரு மோகன்குமார் - தலைவர் பெங்களூரு உல்சூர் (Ulsoor) ரோட்டரி கழகம்,. திரு. R.P.ஷெட்டி, திரு ரவி, திரு.G. சேகர், & திரு..V, சோமசுந்தரம் (பெங்களூரு உல்சூர் ரோட்டரி கழகம்,) திரு.S,பஞ்சநாதன் - பெங்களூரு உத்யோக் (Udyog) ரோட்டரி கழகம், மற்றும் திரு P .நாகராஜன் - “கல்வி சக்தி” செயல் திட்ட இணைப்பாளர், இவர்களுடன் திரு.T.R ,தனசேகரன் -சென்னை சன் சிட்டி ரோட்டரி கழகம், இவ் நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளராக கடமையாற்றினார்.
“கல்வி சக்தி” திட்டத்தின் மூலம் பின் தங்கிய கிராமப் பகுதியில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதட்கு இணையம் மூலமாக சிறந்த ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை கற்பிப் பார்கள். சகல நிலயத்திட்கும் ஒரு இணைப்பாளர் கடமை யாற்றுவார்.
தற்சமயம் இந்தியாவில் 200 நிலையங்களும் இலங்கையில் 3 நிலையங்களும் செயல் படுகிறது. இதுவரை இச் செயல்பாட்டின் மூலம் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள். இதன் மூலம் திருகோணமலை மாவட்ட மாணவர்கள் நிச்சயம் பயன் பெறுவார்கள்.
இவ் நிகழ்ச்சிக்கு திருகோணமலை ரோட்டரி கழகம் சார்பில் முன்னாள் தலைவர் வைத்தியர் ஞானகுணாளன் தலைமையில், செயலாளர் ரகுராம் மற்றும் கழக உறுப்பினர்கள் பெருமளவில் பங்கு பற்றி சிறப்பித்தார்கள்.
0 comments :
Post a Comment