அஸ்ஹர் இப்றாஹிம்-
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக இணைப்பு ( தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலகம்) செரண்டிப் ஓகானிக் ஹோல்டிங் நிறுவனத்துடன் தொழில்நுட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.என்.டீ.என்.குமார அவர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட உயிரியல் பூச்சி கொல்லி உருவாக்கத்திற்கான தொழில்நுட்ப உரிமத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் முன்னிலையில் அண்மையில் கையெழுத்திடப்பட்டது.
இது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு வெற்றிகரமான ஒப்பந்தமாகும்.
பசுமை பூச்சி மேலாண்மையில் பல்கலைக்கழக தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதனை இச் செயற்பாடு நோக்கமாகக் கொண்டது.
நவீன அறிவு, நிபுணத்துவம், பயிற்சி, வணிகமாக்கல் முயற்சிகள், விவசாய செயன்முறைகளை மேம்படுத்துதல், மற்றும் விவசாயிகளின் பொருளாதார மட்டத்தை பிராந்திய மட்டத்தில் ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு இது பெரிதும் துணை புரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment