அஸ்ஹர் இப்றாஹிம்-
அம்பாறை,பன்னலகம 2 சீ, குமண பிரதேசத்தைச் சேர்ந்த தந்தையொருவர் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
6 மாதங்களுக்கு முன்பு அவரின் மனைவி குடும்ப கஸ்டநிலை காரணமாக மத்திய கிழக்கில் வீட்டுப்பணிப் பெண்ணாக சென்றுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக மகள் தாயிடம் முறையீடு செய்த நிலையில் இந்த விடயம் தந்தைக்கு தெரியவந்ததால் இந்த விடயம் சம்பந்தமாக பொலிஸாருக்கு அறிவித்தால் தனது இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து விடுவதாக மனைவியை கணவன் மிரட்டியுள்ளார்.
மனைவி இது விடயமாக தமண பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ததனையடுத்து தமண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மனோஜ் திஸாநாயக்க தலைமையில் பெண் பொலிசாருடன் சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் தன்னை கைது செய்யப்போவதாக அறிந்து வீட்டுக்குள் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அம்பாறை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி நந்தன ஜயபத்ம தலைமையிலான தமண பொலிஸார் இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment