"உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது" எனும் தொனிப்பொருளில் மீராகேணி பொது நூலகத்தில் நிகழ்வு



ஏறாவூர் சாதிக் அகமட்-

மீராகேணி பொது நூலகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய வாசிப்பு மாத இறுதி நிகழ்வு நூலகப் பொறுப்பாளர் திருமதி.கதீரா நஜிமுதீன் அவர்களது தலைமையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஏறாவூர் பற்று பிரதேச சபையின் செயலாளர் திரு.V. பற்குணன் அவர்களும் ஏறாவூர் நகர சபையின் செயலாளர் MHM.ஹமீம் ஆகியோர்களும்

கௌரவ அதிதிகளாக சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பாடசாலையின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,சமூக சேவையாளர்கள் என கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் அலங்கரித்திருந்தமையும் குறிப்பிடதக்க ஒரு விடயமாகும்.இந் நிகழ்வில் மீராகேணி பிரதேசத்தில் முதலாவதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்களான SAC.அஜ்மல் கான்,ALM.நௌபீ ஆகியோர்கள் சனசமூக நிலையத்தின் ஊடாக கௌரவிக்கப்பட்டார்கள்.என்பது குறிப்பிடக்கது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர் பற்குணன் உரையற்றுகையில்

ஜனாதிபதியால் உள்ளுராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அது நடந்தால் எங்களுடைய ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு வருமானம் மென்மேலும் மேற்கொள்ளும் நாங்கள் வாசிய சாலைக்கு இன்னும் மென்மேலும் பண உதவிகளை நாங்கள் செய்ய முடியும்

வருடம்தோறும் நடைபெறும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வு முதலாவது மீராகேணி பொதுநூலகம் நடாத்துவதையிட்டு பெறும் மகிழ்ச்சி அடைகின்றேன்.அத்துடன் வாசிப்பு ஒரு மனிதனை பூரனமாக்கும் என்ற விடயமும் இருக்கின்றது.இன்றைய தலைவர்கள் நாளைய தலைவர்கள்.ஆகவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நூலகத்திற்கு அனுப்ப வேண்டும்.இந்த நூலகத்திற்கு தேவையான அனைத்து வசதிளும் செய்து கொடுக்கப்படும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.



















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :