சம்மாந்துறை கோட்டக்கல்வி பணிப்பாளராக நசீர் நியமனம் .



வி.ரி. சகாதேவராஜா-

ம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த ஏ. நசீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிந்தவூரைச் சேர்ந்த ஜனாப். ஏ. நசீர் ஏலவே வலயத்தின் உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளராக சிறப்பாக சேவையாற்றி வந்தவராவார்.

அவருக்கான நியமன கடிதத்தை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா நேற்று (20) திங்கட்கிழமை அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

அச்சமயம் பிரதி கல்விப் பணிப்பாளர்களான அரபாத் மொகைடீன் மற்றும் திருமதி நிரோபரா ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.

ஏனவே சம்மாந்துறை கோட்டக்கல்வி பணிப்பாளராக இருந்த எம்.ஜனோபர் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப் பதவி வெற்றிடமாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :