சூரிய மின் சக்தி கட்டமைப்பு பொருத்துவதற்கான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடவடிக்கை.


நூருல் ஹுதா உமர்-


ள்ளிவாசல்கள், பள்ளிவாசல்களுடன் இணைந்து செயற்படும் அனைத்து அரபுக் கல்லூரிகள், மத்ரசாக்கள் மற்றும் ஏனைய கல்வி நிலையங்களுக்கு அல்லது தனித்து இயங்கும் அரபுக் கல்லூரிகள், மத்ரசாக்களுக்கும் சூரிய மின் சக்தி கட்டமைப்பை பெற்றுக் கொள்வதற்கு தேவையான தகவல்களை வழங்குமாறு சகல பள்ளிவாசல், தக்கியாக்கள், சாவியாக்களின் நம்பிக்கையாளர்கள், நம்பிக்கைப் பொறுப்பாளர்கள், சகல அரபுக் கல்லூரிகள், மத்ரசாக்களின் அதிபர்கள் மற்றும் பொறுப்பாளர்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வழங்கப்பட்டுள்ள படிவத்திற்கு அமைய பூரணப்படுத்தி எதிர்வரும் 2023.11.27 திகதிக்கு முன்னர் (எம்.ஐ.ஹியாஸ் அபிவிருத்தி உத்தியோகத்தர்) 0715454486 எனும் வாட்சப் இலக்கத்திற்கு அல்லது திணைக்கள முகவரிக்கு அல்லது director@muslimaffairs.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்வதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளரின் சார்பில் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :