கல்முனையில் DP EDUCATION IT CAMPUS இன் இலவச கல்விப் பணி!



லங்கையில் மிகப்பிரபல்யம் மிக்க DP EDUCATION IT CAMPUS கல்முனையில் தனது கல்விச் சேவையை விஸ்தரித்துள்ளது. குறித்த கல்வி நிலையம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பும் கல்வி நிலையத்தின் அறிமுக நிகழ்வும் இன்று 2023.11.03 ஆம் திகதி சாய்ந்தமருதில் அமைந்துள்ள Dr. Jameel Memorial Hospital கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பேராசிரியர் றஸ்மி ஆதம்பாவா அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தம்மிக மற்றும் பிரிசிலா பெரேரா அறக்கட்டளை நிறுவனத்தின் DP EDUCATION IT CAMPUS கல்வி நிலைய செயற்பாடுகள் மற்றும் குறித்த கல்வி நிறுவனத்தின் பாட நெறிகள் தொடர்பில் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது.

சுமார் 25 இலட்சம் பொறுமதியான; முதற்கட்டமாக 750 மாணவ மாணவிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ள குறித்த கல்வித் திட்டமானது கல்முனை பிராந்திய மாணவர்களுக்கு மிகுந்த வரப்பிரசாதமாக அமையப்போகின்றது.

கணினி குறியீட்டு முறைக்கற்கை நெறி (Computer Coding ) செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற இன்றைய காலத்தின் கணணி தொழில்நுட்ப தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குறித்த கல்வித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.

இக் கற்கைநெறி அனைவரும் இலகுவாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கல்முனை அல் ஹாமியா மற்றும் Dr. Jameel Memorial Hospital போன்றவற்றின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த கல்வி நிறுவனம் செயற்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் Dr. சனா ஜமால்டீன் கல்வி நிறுவனத்தை கல்முனை பிராந்திய மாணவர்கள் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினார். மறூஸ் ஜமால்டீன் திட்டமிட்டுள்ள பாடநெறிகள் மற்றும் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தார். நிகழ்வின்போது அல் ஹாமியாவின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்வில் பங்குகொண்ட ஊடகவியலாளர்கள் மற்றும் கலந்துகொண்டோரின் கேள்விகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :