தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் 12 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வரங்கு! (படங்கள் இணைப்பு)



லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடம், Emerald Publishing இன் பங்களிப்புடன் ஏற்பாடு செய்திருந்த “Driving innovation for sustainable Future: Towards a Resilient and Regenerative World” எனும் தொனிப்பொருளிலான 12 ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வரங்கு வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சபீனா எம்.ஜி. ஹசன் அவர்களது தலைமையில் 2023.12.13 ஆம் திகதி பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் கேட்போர் கூடத்திலும் வர்த்தக முகாமைத்துவ பீடத்திலும் இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றது.

நிகழ்வின் முதலாவது அமர்வில் AiRC 2023 மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் எஸ் குணபாலன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். அத்துடன் தலைமையுரையை பீடாதிபதி கலாநிதி சபீனா எம்.ஜி. ஹசன் அவர்கள் நிகழ்த்தினார். விழாவின் தொடக்கவுரையை பேராசிரியர் எஸ்.ஆர். கேசவா அவர்கள் நிகழ்த்தினார்.

ஆய்வரங்குக்கு, உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்நிலையாக உரையாற்றினார்.

நிகழ்வின் பிரதான பேச்சாளராக பேராசிரியர் காலிட் ஹுசைனி அவர்கள் கலந்துகொண்டு நிகழ்நிலையாக உரையாற்றினார்.

விழாவின் தொடக்கவுரையாற்றிய பேராசிரியர் எஸ்.ஆர். கேசவா மற்றும் பீடாதிபதி கலாநிதி சபீனா எம்.ஜி. ஹசன் ஆகியோர் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்ட அதேவேளை வர்த்தக முகாமைத்துவ பீட பேராசிரியர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் அனுசரணையாளர்களும் நிலைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..  

முதலாவது அமர்வின் இறுதியில் AiRC 2023 மாநாட்டின் செயலாளர் ஏ.ஆர்.எப். தபானி அவர்கள் நன்றியுரையாற்றினார். AiRC 2023 மாநாட்டின் பொருளாளர் எம்.பி. பாத்திமா சாஞ்ஜீதாவும் பிரசன்னமாகியிருந்தார்.

இரண்டாவது அமர்வில் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்ட 45 ஆய்வுக்கட்டுரைகள் விவாதிக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டன.

நிகழ்வின் மதிப்புரையை Emeritus பேராசிரியர் எஸ்.அருணாச்சலம் அவர்கள் நிகழ்த்தினார்.

ஆரம்ப நிகழ்வின்போது கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. பீடாதிபதிகளான பேராசிரியர் எம்.எம். பாஸில் மற்றும் கலாநிதி யு.எல். அப்துல் மஜீத் ஆகியோருடன் பேராசிரியர்கள் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தோர், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் நிகழ்வுகளின்போது பிரசன்னமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.





































































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :