பெரியநீலாவணையில், 19வது தேசிய பாதுகாப்பு சுனாமி நினைவு தின சிரமதான நிகழ்வு



ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ருதமுனை பிரண்ட்ஷிப் போரம், மற்றும் ஷம்ஸ் டொப் 97 ஆகிய சமூக அமைப்புக்கள் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த 19 வது தேசிய பாதுகாப்பு தினமான சுனாமி ஞாபகார்த்த சிரமதான நிகழ்வு பெரியநீலாவணை சுகாதார சிகிச்சை மத்திய நிலையத்தில் ஏ.எஸ்.எம்.முஜீப் தலைமையில் நடைபெற்றது.

டெங்கு அபாயத்தில் இருந்து நம்மை நாம் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி, பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.எஸ்.கே.வீரசிங்க, மருதமுனை ஜம்இய்யதுல் உலமா சபை தலைவரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எப்.எம்.அஹமது அன்சார் மௌலானா உட்பட சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விசேடமாக கல்முனை ஸாஹிரா கல்லூரியின் அபிவிருத்தி குழு செயலாளர் சாய்ந்தமருது வைத்தியசாலையில் வைத்தியர் டொக்டர் சனூஸ் காரியப்பர் தலைமையிலான "சாஹிறியன்ஸ் 90" அமைப்பினர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :