வரவேற்புரையயை பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா அவர்களும் தலைமையுரையை பேராசிரியர் எம்.எம்.பாஸில் ஆவர்களும் ஆற்றினர்.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இங்கு 12வது இலங்கை பொருளாதார ஆய்வு மாநாட்டின் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை ஒன்றும் பொருளாதார ஆராய்ச்சிக்கான இலங்கையின் ஆய்விதழ் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வின் பிரதான பேச்சாளராக நீர்ப்பாசன திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் சீனத்தம்பி மோகனராஜா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தேசிய நிலைபேறான வளர்ச்சிக்கு உள்ளூர் திறன் உருவாக்கம் தொடர்பான குழு விவாதம் ஒன்றும் இடம்பெற்றது.
இலங்கை பல்கலைக்கழக பொருளாதார மன்றத்தின் ஸ்தாபகர், இணை ஸ்தாபகர், முன்னாள் தலைவர்கள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு விருது வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
2023 ஆம் ஆண்டின் இலங்கை பல்கலைக்கழக பொருளாதார மன்றத்தின் தலைமைத்துவத்தை வைத்திருந்த தென்கிழக்கு பலகலைக்கழகம் 2024 ஆம் ஆண்டினைத் தலைமை தங்கி கொண்டு செல்ல ஜெனரல் ஸ்ரீ ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்தது.
நிகழ்வில் கௌரவ அதிதி உரையை ஜெனரல் ஸ்ரீ ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரியர் அட்மிரல் எச்.ஜி.யு. தம்மிக குமார அவர்கள் நிகழ்த்தினார்.
அங்குராப்பன நிகழ்வின் இறுதியில் நன்றியுரையை இலங்கை பொருளாதார ஆய்வு மாநாடு –2023 (SLERC) இன் செயலாளர் கலாநிதி ஏ.ஏ.எம்.நுபைல் அவர்கள் ஆற்றினார்.
பின்னர் இலங்கை பொருளாதார ஆய்வு தொடர்பான மூன்று அமர்வுகள், பல்வேறு தளங்களில் இடம்பெற்றது. இதில் கலாநிதி ரீ. சிவக்குமார் அவர்கள் Advanced Excel Tips & Tricks to Work Smart என்ற தலைப்பில் செயலமர்வு ஒன்றை நடாத்தினார்.
இறுதியாக இலங்கை பல்கலைக்கழக பொருளாதார நிபுணர்கள் மன்றத்தின் 48 வது கூட்டமும் இடம்பெற்றது.
நிகழ்வுகளின்போது தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.சபீனா ஹசன் எம்.ஜி. மற்றும் பேராசிரியர்கள் சிரேஷ்ட விவுரயாளர்கள் விரிவுரையாளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment