அந்த பாடசாலைகளாவன ஜெயபுர சிங்கள வித்தியாலயம், சிவசக்தி தமிழ் கலப்பு பாடசாலை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண தமிழ் வித்தியாலயம் (திருகோணமலை).
திருகோணமலை மெதடிஸ்த தேவாலயங்களின் சேகர முகாமை குரு அருள் பணிதிரு. எஸ்.டபிள்யூ. தேவகுமார், அருள் பணிதிருமதி. டெய்சி தேவகுமார், அருள் பணிதிரு.சுயதாசன், தேவாலய ஊழியர்கள், உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
திருகோணமலை மெதடிஸ்த தேவாலயங்களின் உறுப்பினர்கள் மேற்படி பாடசாலை மாணவர்களுக்கு ரூபா ஒரு லட்சத்து அறுபதாயிரம் (ரூ. 160,000) பெறுமதியான பாடசாலை உபகரணங்களை விநியோகித்தனர். . திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினர்களும், இந்த ஆண்டு நிகழ்வுக்காக, ஜனவரி 2023 இருந்து பணத்தை சேமித்தார்கள்.
0 comments :
Post a Comment