பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டும் நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியினால் மக்களுக்கு ஏற்கனவே ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமை கருதியும் , குறித்த வரி தொடர்பான நிதி முகாமைத்துவ மற்றும் சட்ட ரீதியான விடயங்களை கருத்தில் கொண்டும் கடந்த 3 வருடங்களாக குடியிருப்பு ஆதனங்களிலிருந்து ( வீடுகள், காணிகள் ) கல்முனை மாநகர சபையினால் அறவிடப்பட்டு வந்த மேற்படி அறவீடு 2024 இற்கான மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கான முகாமைத்துவக் குழு அங்கீகாரத்துடன் 2024 இலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்பதனை பொதுமக்களுக்கு அறியத் தருகிறோம் என கல்முனை மாநகரசபை அறிவித்துள்ளது.
மக்கள் சோலைவரி கட்டும்போது முஸ்லிம் காங்கிரசின் மேயர் இவ்வாறு குப்பைவரி கொண்டு வந்ததை ஐக்கிய காங்கிரஸ் கட்சி தொடர்ந்தும் கண்டித்து வந்ததோடு இதை நீக்க வேண்டும் என கோரி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment