தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழிநுட்பவியல் பீடத்தில் 3 ஆவது சர்வதேச ஆய்வரங்கு!



லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பவியல் பீடம் ஏற்பாடு செய்திருந்த “Sustainable economic development through empowerment research on science and technology” எனும் தொனிப்பொருளிலான 3 ஆவது சர்வதேச ஆய்வரங்கு 2023.12.12 ஆம் திகதி தொழிநுட்பவியல் பீடத்தில் நிகழ்நிலையாக இடம்பெற்றது.

தொழிநுட்பவியல் பீட பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இவ் ஆய்வரங்குக்குக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் கலந்து கொண்டார்.

நிகழ்வின்போது ஆய்வரங்கின் இணைப்பாளர் எஸ்.எல். அப்துல் ஹலிம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தியதுடன் நிகழ்வின் பிரதான பேச்சாளர்கள் தொடர்பில் அறிமுக உரையையும் நிகழ்த்தினார்.

பிரதான பேச்சாளர்களாக மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பேராசிரியர் ஜிஹான் டயஸ் (Father of Internet & email of Sri Lanka) அவர்களும் றுஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் Emeritus பேராசிரியர் காமினி சேனநாயக்க Chairman Expert Committee to Develop a Policy Framework to Modernize the Agriculture Sector, Presidential Secretariat, Sri Lanka அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

ஆய்வரங்கின் செயலாளர் கலாநிதி ஏ.என்.எம் முபாறக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான குறித்த 3வது சர்வதேச மாநாட்டில் (3rd International Conference on Science and Technology (ICST2023) ) எட்டு வித்தியாசமான தலைப்புக்களில் 76 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் குறித்த கட்டுரைகள் திறனாய்வாளர்களினால் உன்னிப்பான முறையில் ஆராயப்பட்டு, அவர்களின் பரிந்துரைகளுக்குப் பின்னர் 35 ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

















 

 

 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :