காலி முஸ்லிம் கலாச்சார சஙகத்தின் 60 வது ஆண்டு நிறைவு வைபவம் வெள்ளவததை மெரைன் ரைவ் ஹோட்டலில் ஞயிற்றுக்கிழமை 10ஆம் திகதி நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி, அலி சாஹிர் மொளலானா, மற்றும் இவ் அமைப்பின் தலைவர் லாபிர் ஹரீம், மற்றும் ஆலோசகர் ஹனீப் சூசுப், இல்யாஸ் கரீம் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
அத்துடன் காலி நகரில் இச் சங்கம் கடந்த 60 வருட காலமாக சகல சமூகங்களையும் இணைத்து செயல்படுகின்ற சமூக சேவைகள் மற்றும் அகதியா பாடசாலைகள், இரண்டு பள்ளிவாசல் போன்ற திட்டங்களை சிக்காப் இஸ்மாயில் விளக்கமளித்துக் கூறினார்அத்துடன் அகதியா பாடசாலை மாணவர்கள் நிகழ்ச்சிகளும் இடம் பெற்றதோடு காலி பள்ளிவாசல்கள் பிரதான நம்பிக்கையாளர்கள் அல்ஹாஜ் ரவுப் மற்றும் இஸ்மத் மொஹமட், ஆகியோர்களது சேவையை பாரட்டி கௌவரித்தமையும் குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வுக்கு காலி நகரில் வாழ்பவர்கள் பெருமளவில் சமுகமளித்திருந்தமையும் குறி்பபிடத்தக்கது.
0 comments :
Post a Comment