சிலேவ் ஜலன்ட் சேச் ஸ் ரீட் மல்கருல் இஸ்லாம் மத்ரசா 90 வருட பூர்த்தி நிகழ்வுகள்



அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு சிலேவ் ஜலன்டில் இந்திய முஸ்லிம்கள் 1933ல் மல்கருல் இஸ்லாம் சங்கத்தின் கீழ் இத் தோட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் சிறார்கள் ஆன்மீக கல்வி, மற்றும் பாலர் பாடசாலைக் கல்விக்காக இவ் கல்வி நிலையத்தினை ஆரம்பித்து வைத்தார்கள்... இங்கு இப்பிரதேசத்தில் வசதி குறைந்த மக்களது ஆன்மீகக் கல்விக்காக 75க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமது பாடசாலை விட்டு வீடு வந்து மார்க்கக் கல்வியை பயிலுகின்றனர். இக் கல்வி நிறுவனம் 90 வருடங்கள் 30.12.2023 நிறைவு செய்கின்றது.

இந்நிறுவனத்தின் 90வது நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்திய கலாநிதி மற்றும் கவிஞருமான தாசீம் அஹ்மத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிப் பதங்களையும், சின்னங்களையும் வழங்கி வைத்தார் அத்துடன் கடந்த 45 வருட காலமாக கொம்பனி வீதி பிரதேச மக்களுக்கு ஆற்றும் வைத்திய சேவைக்காக டாக்டர் தாசீம் அஹமது சங்கத்தின் நிர்வாகத்தினார் பாராட்டி கௌரவித்தனர்

கடந்த காலங்களில் கொவிட் மற்றும் நாட்டில் ஏற்பட்ட சில அசம்பாவித சூழ்நிலைகளினால் இக் கல்வி நிலையம் மூடப்பட்டிருந்தது. அதனை மீள் திறந்து இப் பிரதேச வாழ் மக்களது சிறார்களின் மார்க்க கல்வியை மற்றும் பாலா் பாடசாலைக் கல்வியை புகட்டி இம் மாணவர்களை சிறந்த நல்ல பிரஜைகளாக வருவதற்கும் நான்கு மொழிகள் அபிவிருத்திகளை புகட்டுவதற்கு இச் சங்கம் தம்மை அர்பனிப்பதையிட்டு டொக்டர் தாசீம் அஹமத் அவர்கள் பாராட்டுத் தெரிவித்து உரையாற்றினார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைக் கல்வி மட்டுமல்ல மார்க்கக் கல்வியையும் புகட்டி அவர்களை நல்ல ஒழுக்க சீலா்காளாக மேம்படுத்துவதற்கு இது போன்ற தோட்டங்களில் வாழும் மக்களுக்கு இலவசமாக இச் சேவையை இந் சங்கம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது மீள ஆரம்பிக்கப்பட்டு இக் கல்வி நிறுவனம் 75 மாணவர்களுக்கு இலவசக் ஆன்மீக்க கல்வி, அவர்களுக்கான இலவச சீருடைகளையும் வழங்கி வைத்தோம். இச் செயற்பாட்டுக்காக சிறந்த ஆசிரியர்கள் தம்மை அர்பப்பணித்து செயற்படுவதையிட்டும் நாம் பாரட்டுகின்றோம். என இச் சங்கத்தின் தலைவர் மொஹமட் நசீர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுத்தோம். இதனால் கடந்த இரண்டு வருடங்களாக இத் தோட்டத்தில் வாழும் எமது சிறார்கள் மார்க்கக் கல்வியை தொடரமுடியாமல்
வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர்.. இத் திட்டத்தினை ஆரம்பித்து காலமான எமது முன்னோர்களுக்கும் சங்க உறுப்பிணர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக செயலாளர் அங்கு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :