கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வருடாந்த ஒளிவிழா நேற்று முன்தினம்(29) புதன்கிழமை கல்லூரி அதிபர் அருட்சகோதரர் .ச.இ.றெஜினோல்ட் FSC தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பிரதம அதிதியாக இந்தியா இலங்கை நாடுகளின் டி லாசலா சபையின் மாகாண விருந்தினர் அதிவண. அருட் சகோ. பேற்றம் பெரேரா கலந்து சிறப்பித்தார்.
முன்னதாக அதிதிகள் அனைவருக்கும் கார்மேல் பற்றிமா பெண்கள் கல்லூரியிலிருந்து பாண்ட் வாத்தியம் மற்றும் தேவதைகள் சகிதம் பெருவரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில், கல்முனை பங்குத் தந்தை வண.பிதா.ஏ.தேவதாசன் ,மற்றும் கல்முனை சேகரம் மெதடிஸ்த தேவாலய முகாமைத்துவ குரு வண.எஸ்.ரவி. முருகுப்பிள்ளை, வைத்திய நிபுணர்களான டாக்டர் சி.ஆர்.றொஹான், டாக்டர் எஸ்என். றொசாந்த், பொறியியலாளர் ஹென்றி அமல்ராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
ஒளிவிழாவில் மாணவர்களின் மிகவும் சிறப்பான நிகழ்ச்சிகள் மேடையேறின.
ஒளிவிழாவை ஒட்டி கல்லூரியில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதிதிகளுக்கும் நத்தார் பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்வித் திணைக்களம் சார்பில் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ச.சரவணமுத்து, உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, ஆசிரிய ஆலோசகர் திருமதி ரிகே. பத்திரண, ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் திருமதி மெற்றில்டா பெர்ணான்டஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment