மருதமுனை அல்- ஹிக்மா ஜூனியர் பாடசாலை மாணவன் முஹம்மட் ஷாப் அண்மையில் வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 168 புள்ளிகளை பெற்று தனது பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி 145 ஆகும். முஹம்மட் ஷாப் 168 புள்ளிகளைப் பெற்று மருதமுனையில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார். இவர் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் உமறுத்தீன் சஹதூனல் சஜீத், முஹம்மட் பாறூக் பாத்திமா சப்னா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வராவார்.
0 comments :
Post a Comment