மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக கே.கனகேஸ்வரன் பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சின் செயலாளரினால் நிமிக்கப்பட்டுள்ளார்.
நியமனக்கடிதம் கையளிக்கும் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,இராஜாங்க அமைச்சருமான கௌரவ காதர் மஸ்தான் கலந்து கொண்டிருந்தார்.
1998 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டுவரை கொடிகாமம் போகட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராகவும், 2003 முதல் 2004 வரை நிர்வாக சேவை பயிற்சியிலும், 2004 தொடக்கம் 2015 வரை தொழில் திணைக்கள பிரதி தொழில் ஆணையாளராகவும், 2015 தொடக்கம் 2019 வரை மருதங்கேணி பிரதேச செயலாளராகவும் , 2019 ஆகஸ்ட் முதல் 2019 டிசம்பர் வரை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், 2019 டிசம்பர் முதல் 2023 வரை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், 2023 நவம்பர் வரை வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
0 comments :
Post a Comment