கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் ஸ்பிரிட்டை பொலிதீன் பைகளில் பொதி செய்து பிளாஸ்டிக் கூடைக்குள் வைத்து தேயிலைக் கொழுந்தை கொண்டு செல்லும் தோறணையில் வாகனத்தில் எடுத்துச் சென்ற சந்தேக நபர்கள் இருவரை அரநாயக- அம்பலகந்த வீதியில் கோண்கஹமுல்ல பிரதேசத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை(17) அரநாயக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் உடகம பிரதேசத்தைச் சேர்ந்த 30,32 வயதையுடைய இளைஞர்களாகும்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் உடகம பிரதேசத்திலுள்ள சந்தேக நபரொருவரின் வீட்டுக்கு பின்னாலுள்ள காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையமொன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரோகண ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் அரநாயக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராகுல பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதுடன், கசிப்பு உற்பத்தி பொருட்களையும் கைப்பற்றியும் உள்ளனர்.
0 comments :
Post a Comment