கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான விவசாய உற்பத்தி மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் முஸ்லிம் எய்ட் அமைப்பினால் விவசாய உபகரணங்கள் (29) வழங்கி வைக்கப்பட்டன. கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய வாழ்வாதர திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளூரில் உற்பத்தியாகும் விவசாய உற்பத்தியை மூலப்பொருளாக கொண்டு "விவசாய பெறுமதி சேர்த்தல் உற்பத்தி" தொழில் முயட்சியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலகத்தில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சூரங்கள் , மஹரு கிராம, கச்சக்கொடித்தீவு, பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட "விவசாய பெறுமதி சேர்த்தல் உற்பத்தி" பெண் தொழில் முயட்சியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார். இவ்வருடம் சுமார் 18 மில்லியன் பெறுமதியான வாழ்வாதர திட்ட உள்ளீடுகள் கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் முஸ்லிம் எயிட் ஊடாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனி. உதவி பிரதேசசெயலாளர் திருமதி பாஹிமா,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப்,பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் நிசவ்ஸ் முஸ்லிம் எய்ட் அதிகாரி எஸ்.எம்.ரிபாய் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
0 comments :
Post a Comment