ஹிங்குராக்கொட கல்வி வலயத்திற்குட்பட்ட நகரிலுள்ள பிரபல பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவியொருவரின் புத்தகப் பைக்குள் விஷப்பாம்பொன்று இருந்ததில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை காலை பாடசாலைக்கு வருக தந்திருந்த மாணவி புத்தகத்தை எடுப்பதற்காக புத்தகப் பைக்குள் கையை விட்ட வேளை ஏதோவொன்று அசைவதாக உணர்ந்த மாணவி சத்தமிட்டவாறு வகுப்பறையை விட்டு வெளியேறியுள்ளார்.
விடயமறிந்த பாடசாலை அதிபரும்,ஆசிரியர்களும் அந்த மாணவியின் புத்தகப் பையை வகுப்பறையை விட்டு வெளியே எடுத்து பார்க்கையில் அதனுள் கறுப்பு நிற விஷப்பாம்பொன்று இருப்பது தெரிய வந்தது.
இந்தப் பாம்பு அந்த மாணவியின் வீட்டிலிருந்தே புத்தகப்பைக்குள் நுழைந்திருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.
0 comments :
Post a Comment