2023ம் வருடத்தின் தேசிய வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப்பட்டு அதன் பரிசளிப்பு வைபவமும், கௌரவிப்பு நிகழ்வும் நிந்தவூர் பிரதேச சபையின் அமீர் மேர்ஸா நூலகத்தினால் நடாத்தப்பட்டது.
நிந்தவூர் பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்திற்கு பிரதேச சபையின் செயலாளர் திருமதி ரீ.பரமேஸ்வரன் தலைமை வகித்தார்.
வைபவத்தின் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. எஸ்.எல்.ஏ. கமல் நெத்மினி அவர்களும்,
கௌரவ அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர்
டாக்டர். எம். எம். மஷ்றூபா அவர்களும், அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தைச் சேர்ந்த திரு. வரீ.ரவீந்திரலிங்கம் அவர்களும், மற்றும் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் அழைப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் நடந்து முடிந்த 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கோட்ட மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று ஆக்கிஷ் அலி, மற்றும் வாசிப்புப் போட்டிகளில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்களுக்கு நினைவுப் படிகமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் அமீர் மேர்ஸா ஞாபகர்த்த நூலகத்தினை சிறந்த தேடலுக்கும், வாசிப்புக்குமாக பயன்படுத்திய மதபோதகர்களுக்கும், ஓய்வுபெற்ற கல்வித் திணைக்கள பிரதி கல்வி பணிப்பாளர் அல்ஹாஜ். எம். எம். ஏ. அஸீஸ் அவர்களுக்கும் சிறப்பு ஞாபகர்த்த பரிசில்களும் வழங்கப்பட்டன.
சிறப்பு நிகழ்வுகளாக அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளரை கௌரவிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் கையளிக்கப்பட்டது.
பிரதம விருந்தினராக சமுகமளித்து சிறந்த உரையை நிகழ்த்திய பல்கலைக்கழக சிரேஷ்ட நூலகர் அவர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
0 comments :
Post a Comment