அஸ்ஹர் இப்றாஹிம்-
உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்களுக்கான எச்.ஐ.வி (எயிட்ஸ் )குறித்த விஷேட விழிப்புணர்வு நிகழ்வொன்று, பணிமனையின் கேட்போர் கூடத்தில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்கள் தலைமையில் (4) இடம்பெற்றது.
"சமூகத்தை வலுப்படுத்துவோம்; எயிட்ஸைத் தடுப்போம்" எனும் தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வின் வளவாளராக கல்முனை பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.என்.எம். தில்ஷான் அவர்களினால் எயிட்ஸ் தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர். ஸக்கிலா இஸ்ஸடீன் உள்ளிட்ட பிரிவுத் தலைவர்கள் மற்றும் பணிமனையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment