கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/ கமு/ அல்-அஸ்ரப் மகா வித்தியாலய மாணவர்களின் ஆக்கத் திறனை வெளிப்படுத்தும் முகமாக 2023 தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு 2023.12.11 ஆந் திகதி "கசகர்ணம்" எனும் நாமம் சூடிய சஞ்சிகை பாடசாலை முதல்வர் வீ. முஹம்மட் ஸம்ஸம் தலைமையில் வெளியிடப்பட்டது.
சஞ்சிகை பொறுப்பாசிரியை சித்தி மசூறா சுகூர்தீனின் நெறிப்படுத்தலில், பாடசாலை பிரதி முதல்வர் ஏ.எல். றஜாப்தீன் அவர்களின் ஆலோசனையின் பேரில் சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி எம்.என். சஞ்சிதா பர்ஹத் அவர்களை சஞ்சிகை ஆசிரியராகக் கொண்ட பெரும் முயற்சி எனும் அர்த்தம் கொண்ட "கசகர்ணம்" நூல் வெளியீட்டின் இணைப்பாளரான தமிழ் பாட சிரேஷ்ட ஆசிரியர் எம்.ஐ.எம். காஸிம் சஞ்சிகை பற்றிய சிறப்பான நயவுரையை மேற்கொண்டதுடன், இச்சஞ்சிகை வெளிவருவதற்கு ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியைகளான ஏ.கே.எப்.நுஷைறா, திருமதி எஸ்.சஹாப்தீன், திருமதி ஏ.எஸ்.எஸ். சமியா மற்றும் திருமதி. ஏ.எல்.எப்.பவாஸா ஆகியோர் தமது முழுமையான பங்களிப்புக்களை வழங்கியிருந்தமை பாராட்டுக்குரியது.
இந்நிகழ்வில் பாடவிதான பிரதியதிபர் எம்.சி.எம். தஸ்தகீர், உதவியதிபர் எஸ்.எம். அஹமட் லெவ்வை ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
0 comments :
Post a Comment