ஒரு தசாப்த கால சேவை - பணிப்பாளர் டாக்டர் இரா. முரளீஸ்வரனுக்கு பாராட்டுக்கள்!



வி.ரி.சகாதேவராஜா-
ல்முனை பிரதேச மக்களின் நன்மதிப்பைப்பெற்ற கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா. முரளீஸ்வரனின் ஒரு தசாப்த கால அளப்பரிய இமாலய சேவையை ஒட்டி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இப்பிரதேச மக்களுக்காக வைத்திய சேவையை ஆரம்பித்து இன்றுடன் ஒரு தசாப்தம் (07.12.2013 – 07.12.2023) நிறைவடைகிறது.

அம்பாறை மாவட்டத்தில் நூறு வருடங்களைக் கடந்த பழமை வாய்ந்த பழம் பெரும் வைத்திய சாலையாக கல்முனை ஆதார வைத்தியசாலை இருந்த போதும். கடந்த காலத்தில் பல்வேறு சூழ்ச்சிகள் சுயநல அரசியல் காய் நகர்த்தல்களால் வைத்தியசாலையின் அபிவிருத்திகள் பலவற்றுக்கு திட்டமிட்டு முட்டுக்கட்டைகள் போடப்பட்டிருந்த வரலாறுகள் யாவரும் அறிந்த உண்மை.

இருந்த வளங்களையும் இப்பிரதேச சில அரசியல்வாதிகள் பிடுங்கி எடுத்து தங்களுக்கு ஏற்றால் போல் பயன்படுத்த காய் நகர்த்திய கசப்பான உண்மைகளையும் யாரும் மறக்க முடியாது.

இவ்வாறு பல இன்னல்கள் குறைபாடுகளுக்கு மத்தியில் இயங்கிக் கொண்டிருந்த கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நிர்வாகத் திறமை, பரந்துபட்ட சேவை மனப்பாங்கு, தூரநோக்கு சிந்தனை, பணிவு கனிவு எல்லாம் ஒருங்கே பெற்ற வைத்திய கலாநிதி இரா முரளீஸ்வரன் அவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமை ஏற்று இன்று 10 வருடங்கள்.

இவரின் வருகைக்குப் பின்னர், இவரின் நிருவாகத் திறமையாலும் வைத்தியசாலையின் சேவையின் நிமித்தமும் சுகாதார அமைச்சர்களாக இருந்தவர்கள் உண்மையை அறிந்து சூழ்ச்சிகளை முறியடித்து வைத்தியசாலை நிர்வாகத்தின் சேவைக்காகவும், வைத்தியசாலை பணிப்பாளரின் அயராத முயற்சிகளின் பலனாக பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதுடன், பல அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

உதாரணமாக Icu unit, AAnd E , intern doctors cardiology unit, orthopedic unit, CT scan, stroke unit several ward’s quality awards என அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

சில சதிகார சமூக விரோதிகளின் வைத்தியசாலை்கெதிரான பலத்த சதிமுயற்சிகளுக்கு மத்தியிலும் சேவைக்கு சிறந்த சேவையிலும், நிருவாக கட்டமைப்பிலும் முன்மாதிரியாக திகழும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சியை Dr.இரா முரளீஸ்வரனுக்கு முன்பு Dr.இரா முரளீஸ்வரனுக்கு பின்பு என பெருமையாக கூறுவதில் மகிழ்ச்சி அடைகின்றது.

அவருக்கு இன்று இனமத பேதம் கடந்து பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :