எம்.எஸ். லங்கா நிறுவனத்தில் எந்தவித தவறுகளும் இடம்பெறவில்லை என்றும் அது முறையாக இயங்கிக் கொண்டிருகின்றது. அதனை தொடர்ந்தும் இயங்க எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர் என எம்.எஸ். லங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், தனது அரசியல் எதிரியான எம்.எஸ். லங்கா தவிசாளர் எஸ் எம் சபீஸ் அவர்களுக்கு சொந்தமான எம்.எஸ். லங்கா நிறுவனத்துக்கு கடந்த இரண்டு வருடமாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லா தொல்லைகொடுத்து வந்தார்
எதுவும் சாத்தியப்படாத நிலையில் பாராளுமன்ற குழுவிடம் எம்.எஸ். லங்காவுக்கு எதிராக முறைப்பாடு செய்தார்
அதனைத் தொடர்ந்து தற்காலிக இடைநிறுத்தம் ஏற்படுத்தி உயர்மட்ட குழு நியமிக்கப்பட்டு களப்பரிசோதனைகள் நடத்தப்பட்டன
அதன் அடிப்படையில் எம்.எஸ். லங்கா நிறுவனத்தில் எந்தவித தவறுகளும் இடம்பெறவில்லை என்றும் அது முறையாக இயங்கிக் கொண்டிருகின்றது அதனை தொடர்ந்தும் இயங்க எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment