இதன் போது கட்சியின் செயலாளர் இர்பான் கூறியதாவது,
நமது முஸ்லிம் விடுதலை முன்னணி என்ற கட்சி நீண்ட காலமாக செயல்படுகிறது. இதனை அரசியல் கட்சியாக பதிவதற்கு நாம் தேர்தல் திணைக்களத்துக்கு விண்ணப்பித்திருந்தோம்.
எனினும் சில காரணங்களால் எமக்கான பதிவு நிராகரிக்கப்பட்டது கவலையானது.
தற்போது கட்சியின் பெயரை மாற்றுவது நல்லது என்ற ஆலோசனையை முன் வைக்கிறேன் என்றார்.
அத்துடன் கட்சியின் புதிய பெயரை மாற்றுவது பற்றி அடுத்த உயர்பீட கூட்டத்தில் முடிவெடுக்கலாம் என சபையின் அங்கத்தவர்கள் கூறினர்.
அதனை தொடர்ந்து கட்சித்தலைவர் உரையாற்றுகையில் கட்சியின் 2024ம் ஆண்டுக்கான நிர்வாக சபை தெரிவு மேற்கொள்ள வேண்டியுள்ளது. முன்னர் இருந்த நிர்வாகமே அடுத்த ஆண்டுக்கும் தொடர வேண்டும் என கருதினால் அதனை ஒருவர் பிரேரிக்க இன்னொருவர் ஆமோதிக்கலாம் என்றார்.
அதற்கிணங்க பழைய நிர்வாகமே தொடரலாம் என ருஸ்தி பிரேரித்தார். அதனை ஜப்பார் ஆமோதித்தார்.
0 comments :
Post a Comment