கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சஹிலா இஸ்ஸதீன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எஸ்.ஐ.எம் கபீரின் வழி காட்டலின் கீழ் சுகாதார மேற்பார்வைப் பரிசோதகர் சி.பி.எம் ஹனீபா தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கிராம சேவையாளர்கள், டெங்கு களத்தடுப்பு உத்தியோகத்தர்கள்,சம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தகர்கள்,பிரதேச சபை ஊழியர்கள் இணைந்து இன்று (12) சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கொட்டும் மழைத்தூறலில் வீட்டுக்கு வீடு பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் சுமார் 200க்கு மேற்பட்ட வீடுகளில் மேற்கொள்ளப்பட்டதாகவும்,நுளம்பு பரவலில் இனம் காணப்பட்டோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் டெங்கு நுளம்பு பரவக்கூடிய 31 இடங்கள் அடையாளம் காணப்பட்டு சிவப்பு எச்சரிக்கை அட்டைகள் 07 ஒட்டப்பட்டதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் தெரிவித்தார்.
சுகாதார மேற்பார்வைப் பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவையாளர்கள், டெங்கு களத்தடுப்பு உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தகர்கள் ,பிரதேச சபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment