காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா காத்தான்குடி அல் ஹிறா மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் பாறூக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.எம்.ஹக்கீம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்
இதன் போது பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் இவ் வருடம் நடைபெற்ற 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு பதக்கம் அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர் அதோடு பாடசாலை அதிபர் பாறூக் பிரதி அதிபர் திருமதி முப்லிஹா பிர்தெளஸ் உட்பட ஆசிரியர்யளும் கெளரவிக்கப்பட்டனர்.
இதில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் பலரும் கலந்து சிறப்பித்தனர்
0 comments :
Post a Comment