தாய்மார் ஆதரவு கழக செயற்பாட்டுக்காக தேசிய ரீதியில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பாராட்டை பெற்றது.



நூருல் ஹுதா உமர்-
தாய்மார் ஆதரவு கழக செயற்பாட்டில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தேசிய ரீதியில் 2023ஆம் ஆண்டிற்கான பாராட்டை பெற்றுள்ளது.

சென்ற வருடம் 2022 ஆம் ஆண்டின் தாய்மார் கழக செயற்பாடிலும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு பாரட்டு கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வானது குடும்ப சுகாதார பணியகத்தினால் கொழும்பு தாஜ் சமுத்ராவில் நடாத்தப்பட்டது.

சிறந்த பவர்ப்போயிண்ட் முன்மொழிவினை முன்வைத்த நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே எல் எம் றயீஸ் அவர்களுக்கும் இதன்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறந்த தாய்மார் கழக ஆதரவு செயற்பாட்டில் கலந்து கொண்ட நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக Nature lover குழுமத்தின் உத்தியோகத்தர்களிற்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இச்செயற்பாட்டிற்காக இவ்வருடமும் இப்பாரட்டை பெற உதவிய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கும், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக Natural Lover எனும் தாய்மார் கழக உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் மற்றும் இதன் பங்குதாரர்கள் அனைவருக்கும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே. எல். எம். றயீஸ் அவர்கள் நன்றி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :