மரந்தகஹமுல அரிசி களஞ்சியசாலை வளாகம் ஒன்பது வருடங்களின் பின்னர் அமைச்சர் பிரசன்னவின் தலையீட்டில் திறப்பு



முனீரா அபூபக்கர்-

Ø தனியார் துறையின் அரிசி ஏகபோகத்தை முறியடிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட மரந்தகஹமுல அரிசி களஞ்சியசாலை வளாகம் ஒன்பது வருடங்களின் பின்னர் அமைச்சர் பிரசன்னவின் தலையீட்டில் திறந்து வைக்கப்படும்...

Ø களஞ்சியசாலை வளாகத்தில் சுமார் 75,000 மெட்ரிக் தொன் அரிசியை சேமிப்பதற்கான வசதிகள்...

Ø 115 விற்பனைத் தொகுதி - செலவு ரூ. 459 மில்லியன்...

Ø களஞ்சியசாலை வளாகம் தினமும் காலை 5.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை திறந்திருக்கும்...


சிறிய மற்றும் நடுத்தர அரிசி வியாபாரிகளுக்காக மரந்தகஹமுலவில் நிர்மாணிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக கைவிடப்பட்டிருந்த அரிசி மொத்த விற்பனை மத்திய நிலையம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நாளை (19) திறந்து வைக்கப்படவுள்ளது.

மரந்தகஹமுல நகரம் இந்நாட்டில் அரிசி மொத்த வியாபாரத்திற்குப் புகழ்பெற்ற நகரமாகும். அரிசி மொத்த விற்பனை நிலையமாக வர்த்தக சமூகத்தைக் கொண்ட நாட்டில் மரந்தகஹமுல மட்டுமே உள்ளது. 1977ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மரந்தகஹமுல நகரில் அரிசி வியாபாரிகள் பல சிரமங்களுக்கு மத்தியில் தமது வியாபாரத்தை செய்து வருகின்றனர். ஆனால், அரிசி விற்பனை செய்வதற்கான வசதிகளுடன் கூடிய தனி இடம் இல்லாததாலும், அரிசி சேமித்து வைக்க இடமில்லாததாலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நாட்டில் தனியார் துறையின் நெல் ஏகபோகத்தை முறியடிக்கும் நோக்கில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களினால் இந்தக் களஞ்சிய வளாகம் மற்றும் மொத்த வர்த்தக நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. அது 2014ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திவினெகும திட்டத்தின் ஊடாகவே செயற்படுத்தப்பட்டது.

ஆனால் அது நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இயங்கிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2015 இல் இல்லாதொழிக்கப்பட்டது. அதே நேரத்தில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக, இந்த களஞ்சிய வளாகம் மற்றும் மொத்த வர்த்தக மையம் காடு போல் வளர்ந்து காணப்பட்டது.

அதன்படி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் .பிரசன்ன ரணதுங்க அவர்களின் தலையீட்டின் பேரில், இந்தக் களஞ்சிய வளாகம் புனரமைக்கப்பட்டது. மரந்தகஹமுல களஞ்சிய வளாகம் மற்றும் மொத்த வர்த்தக நிலையத்தின் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க திறைசேரியில் இருந்து பணம் கேட்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த ஆண்டு அமைச்சரவை பத்திரத்தையும் சமர்ப்பித்திருந்தார்.

மரந்தகஹமுல களஞ்சிய வளாகம் மற்றும் மொத்த வர்த்தக நிலையம் அமைந்துள்ள காணி சுமார் இரண்டு ஏக்கர் அளவில் இருக்க வேண்டும். 115 அரிசி விற்பனை நிலையங்களைக் கொண்ட இதனை நிர்மாணிப்பதற்கு 459 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகிறார்.

இங்கு கட்டுமானப் பணிகள் முழுவதையும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் செய்துள்ளது. இந்தக் களஞ்சிய வளாகத்தில் சுமார் 75,000 மெட்ரிக் தொன் நெல்லை சேமித்து வைக்கும் வசதிகள் உள்ளன. நெல் வாரியத்தின் கீழ் உள்ள இரண்டு களஞ்சியசாலைகளும் இதுவரை எவ்வித பயனும் இல்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த களஞ்சியசாலை அடுத்த பருவத்தில் இருந்து அரிசியை களஞ்சியப்படுத்துவதற்காக மேல் மாகாண கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அதற்காக மேல்மாகாண ஆளுநர் உள்ளிட்ட உரிய தரப்பினருடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறுகிறார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :