அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது பொலிவேரியன் பொது விளையாட்டு மைதானத்தை செப்பனிட்டு,அதனை சுற்றி நிழல்தரும் மரங்களை நட்டு, மைதான ஒரத்தில் நடைபாதை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்
சாய்ந்தமருது சமூக செயற்பாட்டாளரும் பொறியியலாளருமான முஹம்மட் பாரிஸ் சாய்ந்தமருது பொலிவேரியன் பொது விளையாட்டு மைதானத்தினை செப்பனிட்டு அதனைச் சுற்றி மரம் நடுவதற்கும் மற்றும் மைதானத்தைச் சுற்றி நடைபாதை அமைப்பதற்குமான வேலைத்திட்டம் ஒன்றைச் செயலபடுத்துவது சம்பந்தமாக சாய்ந்தமருது கிரிக்கெட் சம்மேளனம் மற்றும் ஓகானிக் கிறீன் சமூக அமைப்பு மற்றும் ஓ.ஜீ. விளையாட்டுக் கழகம் என்பவற்றினை அழைத்து ஆலோசனைக் கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார்.
அதன்படி விரைவில் மைதானத்தை செப்பனிட்டு மைதானத்தைச் சுற்றி மரங்கள் நடுவதாகவும் மற்றும் நடைபாதை ஒன்றை அமைப்பதாகவும் அதற்கு சாய்ந்தமருது கிரிக்கெட் சம்மேளனம் மற்றும் ஓகானிக் கிறீன் அமைப்பு ஆகியன தங்களது பூரண ஒத்துழைப்புகளை வழங்கி வேலைத்திட்டத்தை சிறப்புற முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொள்ளப்பட்டது.
இவ்வேலைத் திட்டத்தை தானாக முன்வந்து சாய்ந்தமருது பொது மைதானத்தினை சிறந்த முறையில் அமைக்க வேண்டும் என நினைத்த சமூக செயற்பாட்டாளரும் பொறியியலாளருமான முஹம்மட் பாரிஸ் அவர்களது முயற்சியானது பாராட்டத்தக்க ஒன்றாகும்.
0 comments :
Post a Comment