காத்தான்குடியில் வளர்ந்து வரும் சுற்றுலா தொடர்பான கலந்துரையாடல்



எம்.எம்.றம்ஸீன்-
காத்தான்குடியில். “அடுத்த தலைமுறைக்காக இயற்கை வளங்களை சேமிப்போம்”. எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட காத்தான்குடியில் வளர்ந்து வரும் சுற்றுலா தொடர்பான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை அதன் அலுவலகத்தில் இடம் பெற்றது

நிறுவனத்தின் தலைவரும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வியாபார பொருளியல் துறைப் பேராசிரியரருமான கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா அவர்களின் தலைமையில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன் போது காத்தான்குடியில் வளர்ந்து வரும் சுற்றுலாத்துறையை சமூக, கலாசார மற்றும் மார்க்க விழுமியங்களுக்கூடாக கட்டியெழுப்பி, வியாபார மற்றும் தொழில்வாய்ப்புக்களை மேம்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன

இக்கலந்துரையாடலில் இந்தியாவின் கேரளா, பெங்களூர், தமிழ்நாடு மற்றும் திருநெல்வேலி, மதுரை நகரங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் சுற்றுலா மற்றும் பொருளியல்துறைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான பல்வேறு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்கினர்.
நிகழ்வில் காத்தான்குடியிலுள்ள பல்வேறு சிவில் சமூக நிறுவனங்களையும் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :