ஒலுவில் அஸ்- சிஹா முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வுகள் ஒலுவில் ஜைஸா மகளீர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் பெரும் விமர்சையாக நடைபெற்றது.
ஒலுவில் அஸ்- சிஹா முன்பள்ளி பாலர் பாடசாலை தலைமை ஆசிரியையின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கின் கேடயத்தின் தலைவரும், அக்கரைப்பற்று பெரிய ஜும்மாபள்ளிவாசல் மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம். சபீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வுகளில் கௌரவ அதிதிகளாக மகளீர் கல்லூரி அதிபர் இஸட்.ஏ. கலீல் ரஹ்மான், மினாரா வித்தியாலய அதிபர் எம்.வை.எம். மஜீத், அஸ்ஹர் வித்தியாலய அதிபர் எச். ஜலால்தீன், அக்ஸா வித்தியாலய அதிபர் ஏ.எல்.முக்தார் மற்றும் முன் பள்ளி பாடசாலைகள் பணியகத்தின் முகாமைத்துவ உதவியாளர் ஐ.ஏ. ராசி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், பிரதம அதிதியாக கலந்துகொண்ட எஸ்.எம். சபீஸின் சமூகப்பணிகளை பாராட்டி பாடசாலை நிர்வாகத்தினர் கௌரவித்தனர்.
0 comments :
Post a Comment