மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில்!



ஏறாவூர் சாதிக் அகமட்-
ன்று காலை 9 மணி அளவில் இலுப்படிச்சேனைப் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.

இலுப்படிச்சேனை வேப்பவெட்டுவான் பிரதான வீதியில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் - காட்டு யானை தொல்லைக்கு தீர்வு கோரி இலுப்படிச்சேனை வேப்பவெட்டுவான் பிரதான வீதியை வழிமறித்து சுமார் அரை மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கையில் பதாதையை ஏந்தியவாறு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி கோஷங்களை எழுப்பி - சுமார் 50 பேரளவில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் பின் வேப்பவெட்டுவான் இலுப்படிச்சேனை சந்தியை வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள். சந்தியிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலுப்படிச்சேனை பிரதான வீதியால் பேரணியாக சென்றகொன்டிருந்தவேளை

அவ்வழியால் வர ஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் திடீரென வருகை தந்ததை அவதானித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வாகனத்தை வழிமறித்தனர்.

தமக்கான பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருமாறும் காட்டு யானை தொல்லையில் இருந்து தம்மை விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

வேறு வேலையாக அவசரமாக செல்கிறோம் - வரும் போது உங்களை சந்திக்கிறோம் எனத்தெரிவித்து வனஜீவராசிகள் திணைக்கள வாகனம் புறப்பட்டது.

இதன்பின் இலுப்படிச்சேனை - வனஇலாகா அலுவலகம் வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்.வனஇலாகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலுப்படிச்சேனை வன இலாகாவுக்கு சொந்தமான பகுதியான அரச காணியான தேக்கஞ்சோலை பகுதியினுள் காட்டு யானைகள் நிற்பதாகவும் - அக்காட்டினுள் உள்ள யானையை அங்கிருந்து விரட்டும் படியும், தேக்கஞ்சோலை சோலை காட்டுப்பகுதியை துப்பரவு செய்யக்கோரியுமே வனஇலாகா அலுவலகம் முன் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

"அதிகாரியே வெளியேறு வெளியேறு.. எமக்கான தீர்வை பெற்றுத் தா பெற்றுத் தா.. என கோஷமிட்டு அதிகாரிகள் தமது பிரச்சினை தொடர்பில் பதில் கூற வேண்டும் என சுமார் ஒரு மணி நேரம் வாயின் கதவை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் கடந்தும் எந்த அதிகாரியும் வெளியே வரவில்லை.
இதன் போது அங்கு வருகை தந்த கரடியனாறு போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன் பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரை வனஇலாகா அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாட போலீசார் உள்ளே அழைத்துச் சென்றனர்.

அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவது தொடர்பாக - போலீசாரின் வேண்டுகோளுக்கு அமைய ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.













எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :