கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சாரணிய முதலுதவி குழு மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு




அஸ்ஹர் இப்றாஹிம்-
ற்காலத்தில் மாணவ சமுதாயம் எதிர்நோக்கி கொண்டிருக்கும் சசவால்களை வெற்றி கொள்ள மாணவர்களினை இணைப்பாடவிதானத்தில் கவனம் கொள்ளச் செய்வதுடன் தலைமைத்துவ பண்பினை சாரணியத்தின் ஊடாக விருத்தி செய்தல் மற்றும் முதலுதவி குழுவினை பூத்தாக்கம் செய்தல் போன்றவற்றினை நோக்காக கொண்டு கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக சாரணிய பொறுப்பாசிரியர் எம்.ஆர்.எம். றப்கான் ஏற்பாட்டில் கல்லூரி சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில்( 26) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நிந்தவூர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித் அதிதியாகவும் , கல்முனை வலய கல்வி அலுவலகத்தின் ஒய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகரும் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் அம்பாறை மாவட்ட உதவி ஆணையாளருமான ஜ.எல்.எம். இப்றாஹீம் கெளரவ அதிதியாகவும், விஷேட அதிதிகளாக குச்சவெளி தேசிய இளைஞர் படையணியின் நிலையப் பொறுப்பதிகாரியும் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் அம்பாறை மாவட்ட உதவி ஆணையாளருமான மேஜர் எம்.எஸ்.எம். மிப்றாஸ்கான், தேசிய மாணவ சிப்பாய் 17வது படைப்பிரிவின் லெப்டினனும் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் அம்பாறை மாவட்ட உதவி ஆணையாளருமான லெப்டினன்
எம்.ஏ.எம். கியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலுதவி, சாரணிய பயிற்சிப் பாசறை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி. சமதா மசூது லெவ்வை,
ஏ.எச். நதீரா, உதவி அதிபர் என்.டி. நதீகா,சாரணிய பொறுப்பாசிரியர்களான , எம்.எம். றிசான், ஆர்.எம். அஸ்மி, ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :