மலேசியாவின் மலாக்கா பல்கலைக் கழகத்துடன் கூட்டிணைப்பு செய்யப்பட்ட CMT கெம்பஸ் கல்முனை வளாகத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று சனிக்கிழமை (16) வளாக மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
CMT கெம்பஸ் தவிசாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் றமீஸ் அபூபக்கர், கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, ஆகியோர் கெளரவ அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
மேலும், தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில், தொழிநுட்ப பீட பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் மற்றும் பேராசிரியர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர்கள், CMT கெம்பஸ் அதிகாரிகள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்வியியலாளர்கள், பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இங்கு பல்வேறு துறைகளில் உயர் கல்வி கற்கை நெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்து, சித்தியடைந்த 161 மாணவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment