கால் நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் காத்தான்குடி அலுவலகத்தினால் சனிக்கிழமை கோழிக்குஞ்சுகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் ஆலோசனையின் பேரிலும் வழிகாட்டலிலும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவயுடன் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் இந்த கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள 25 பயனாளிகளுக்கு 15 வீதம் ஒரு மாதம் நிரம்பிய கோழிக் குஞ்சுகள் இதன் போது வழங்கப்பட்டன
கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளரும் காத்தான்குடி அலுவலகத்தின் பொறுப்பதிகாரியுமான டாக்டர் டி. மாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கோழிக்குஞ்சுகள் வழங்கும் வைபவத்தில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு. எல் நசிர்தீன் உட்பட அதிகாரிகள் பயனாளிகள் கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment