மாஞ்சோலை ஹிழ்ரிய்யா ஜும்ஆப்பள்ளிவாசலுடன் இணைந்து பதுரியா -மாஞ்சோலை ஹிழ்ரிய்யா கல்வி அபிவிருத்திச்சங்கம் இணைந்து நடாத்திய மாணவர்களைக் கௌரவிக்கும் முப்பெரும் விழா இடம்பெற்றது.
பதுரியா -மாஞ்சோலை ஹிழ்ரிய்யா கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டக்கல்வி அதிகாரியும் பிரதிக்கல்விப்பணிப்பாளருமான வீ.ரீ.அஜ்மீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இம்முப்பெரும் கெளரவிப்பு விழாவில் தரம் - 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள், வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த சாதாரண தரப்பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் நினைவுச்சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டதோடு, மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயம், பதுரியா நகர் அல் மினா வித்தியாலயம் மற்றும் மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலய அதிபர்களுக்கும் அதே பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அர்ப்பணிப்புடன் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment