சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம். இஸ்ஸானா, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம். நபார், கே. ஆதம்பாவா, மாவட்ட செயலகத்திற்கு தலைமை காணி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்றுச் சென்ற கே.ராபி, இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள கலாசார உத்தியோகத்தர் எஸ்.சுரேஸ்குமார், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எச்.எம். ஹம்சார், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எப்.சகிலா, எம்.எப். றாஜிதா, ஏ.ஆர். றினோஸா, எஸ்.ஐ. பஸ்மியா ஆகியோருக்கான பிரியாவிடை நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக நலன்புரிச் சங்க செயலாளர் எம்.ஹுசைன் முபாரக் அவர்களின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், நிருவாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.றம்ஸான், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சி.எம். நஜீம், மேலதிக மாவட்ட பதிவாளர் ஐ.எம். பாயிஸ், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.சி. முஹம்மட், நிதி உதவியாளர் எம்.எஸ்.எம். றியாஸ், பிரிவுக்கான பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஒய்வு பெற்ற மற்றும் பதவி உயர்வு பெற்ற O4 உத்தியோகத்தர்களும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கு நினைவு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டு அவர்கள் அலுவலகம் மற்றும் பொதுமக்களுக்கு ஆற்றிய பணிகள், காரியாலய கடமைகளில் அவர்களின் முன் மாதிரியான செயற்பாடுகள் குறித்து பல உத்தியோகத்தராலும் பாராட்டிப் பேசப்பட்டது.
0 comments :
Post a Comment